பெண்களின் கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகு! Ashoka cures women's uterine problems!

பெண்களின் கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகு!

Ashoka cures women's uterine problems!

Mr.Health Special,

Mr.Health Special,

நமது தேசத்தின் பாரம்பரிய மரம், அசோக மரம். சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பும், பெருமையும் அதிக அளவில் விவரிக்கப்பட்டுள்ளது.  பூ, பட்டை மருத்துவ  பயன் கொண்டவை. இதன் இலைகள் நீண்ட கூட்டிலைகள் அமைப்பு கொண்டது. 

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளிலும்  வளரும். சிலர் தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர்.  பிண்டி என்ற அசோகு வேறு, நெட்லிங்கம் மரம் வேறு. இதை அசோகு, ஆயில், செயலை, பிண்டி,  காகோளி என்று பல்வேறு பெயர்களில் அழைப்பர்.

இதன் ஒரு பூ, பெரிய பூங்கொத்து போன்று செம்மை கலந்து பட்டபூச்சி நிறத்தில் அழகுடன் காட்சியளிக்கும். 

அசோகமரங்கள் மிக அரிய பயன்களை பெண்களுக்குத் தரவல்லவை. ஒரு தாய் தன் மகளுக்கு எப்படி நல்ல விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்வாளோ அதைப்போல, சொல்லப்போனால் அதையும் விட மேலாக, பெண்களின் உடல் நலம் காக்கும் தன்மைமிக்கவை.

100 கிராம் மரப்பட்டையைச்சிதைத்து 400மிலி  தண்ணீரிலிட்டு 100மிலி ஆகும்வரை காய்ச்சி வடிகட்டி 100மிலி பாலில் கலந்து நாள்தோறும் மூன்றுவேளை குடித்து வந்தால் பெண்களின் பெரும்பாடு தீரும்.  இதை வயிற்றுகடுப்பு, மூலம், கட்டிகள் உள்ளவர்கள் குடித்து வந்தால் அவை குணமாகும்.

 மரப்பட்டை 40கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக  எடுத்து சிதைத்து அரைலிட்டர் தண்ணீரில் போட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மிலி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஒரே வாரத்தில் நாட்பட்ட  பெரும்பாடு தீரும். காரம் புளி நீக்கி சாப்பிட வேண்டும்.

அசோகு பூ, மாம்பருப்பு சமஅளவு எடுத்து பொடித்து 3 சிட்டிகை அளவு பசும் பாலில் கொள்ள சீதபேதி ரத்தபேதி நீங்கும். அசோகுபட்டை, மாதுளை வேர்பட்டை,  மாதுளம் பழஓடு சமஅளவு பொடி செய்து அதில்  3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் கொள்ள கருச்சிதைவு வயிற்றுவலி, கர்ப்பச்சூலை, வாயுத்தொல்லை  நீங்கும். தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட குழந்தைபேறு உண்டாகும். 

பூவை 120 கிராம் எடுத்து நுண்ணியதாய் பொடித்து கால் படி தண்ணீர்விட்டு கலந்து சாப்பிட  ரத்தக்கழிச்சல், ரத்தமம் சீழுங்கலந்த கழிச்சலும் போகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் தாங்கமுடியாத வலிக்கு 100 கிராம் அசோகு மரப்பட்டைத்தூளுடன் 25  கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து  அதில்  2 கிராம் எடுத்து சிறிது பசும் வெண்ணெயில் குழைத்து நாள்தோறும் மூன்றுவேளை சாப்பிட ஓரிரு மாதங்களில்  மாதவிடாயின் போது ஏற்படும் தாங்க முடியாத வயிற்றுவலி முற்றிலும் நீங்கும்.

பட்டையை இடித்து சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிக்கரண்டி அளவு சாப்பிட பெரும்பாடு தணியும். 

பெண்களின் கருப்பை குறை பாட்டால் குழந்தை பேறு  இல்லாதவர்கள் மரத்தின் பட்டை கால்கிலோ, கருப்பு எள் 50 கிராம் எடுத்து  சுத்தப்படுத்தி தூளாக்கி கொள்ளவேண்டும். இதை மெல்லிய துணியில் சலித்து  வைத்து கொள்ள சூரணமாகும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து 400மிலி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து 200மிலியாக சுண்ட காய்ச்சி எடுத்து வடி கட்டி  காலை மாலை வெறும் வயிற்றில் குடித்துவரவேண்டும். இதனால் பெண்களின் கருப்பை பலவீனம் நீங்கி வலுப்படும். கருப்பையில் உள்ள கட்டிகள் நீங்கும்.  வீக்கம் வடியும். சினைப்பையில் உண்டாகும் நீர்கட்டிகள் அதன் குழாயில் ஏற்படும் குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். இதனால் பெண்களுக்கு கருநிற்கும். குழந்தை பேறு உண்டாகும். 

பட்டை 105 கிராம் எடுத்து சிதைத்து எட்டு ஆழாக்கு தண்ணீர் கலந்து ஐந்தில் ஒன்றாக சுருக்கி  நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று வேளை சாப்பிட்டு வர பெரும்பாடு முதலிய ரத்தபெருக்கு நிற்கும். 

கால்கிலோ அசோகு மரப்பட்டை, மாவிளங்கப்பட்டை  100கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் சேர்த்து மைய அரைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்து கொள்ள வேண்டும். இதில் 3 கிராம் அளவில் எடுத்து  காலை மாலை இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதாந்திர சுழற்சி முறையாக இல்லாமல் துன்பப்படும் பெண்களின் துன்பம் நீங்கும் வகையில் மாதாந்திரவிலக்கு ஒழுங்காகும். கருப்பைக்குற்றம், வீட்டு விலக்கான மூன்றாம் நாளுக்கு மேல் தொடங்கிய ரத்தபோக்கு  நிற்கும். கருப்பை குற்றம் நீங்கி பலப்படும்.  

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன குணமாகும்.அசோக மரத்துப் பூவின் தீநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது. அசோக மரப் பூக்களையோ, பட்டையையோ குடிநீராக்கிக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்களும் மன நோய்களும் குணமாகிறது.

அசோகு மரத்தின்  மருந்துண்ணும் காலத்தில் மாலையில் சிறிது கடுக்காய்த்தூளை சாப்பிட்டுவர மலச்சிக்கல் ஏற்படாது. 


Comments

Popular posts from this blog

பிரண்டையின் பயன்கள் Benefits of Brenda in tamil,

அதிக சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்..! Rich in Nutrients Apricot Fruits ..!

பூசணி விதையில் இவ்வளவு ஊட்டச்சத்து உள்ளதா? Is there so much nutrients in pumpkin seeds?