கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள்..! Medicinal properties of nelly below. In Tamil
கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள்..!
Medicinal properties of nelly below. In Tamil..!
Mr.Health Special,
தமிழ் மூலிகைகள் :
கீழா நெல்லிதானா என்பதற்க்கு காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.
செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.அனைத்தும் பயன் தரும்
மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.
கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.இத்க்து ஒரு அனுபவ வைத்தியம்.
கீழாநெல்லி தைலமாகவும் செய்து பயன்ப்படுத்தப் படுகிறது. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் கொதிக்கவைத்து வடித்து தலை முழுகி வரலாம்
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.
கீழாநெல்லி அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சேர்த்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.
இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சம அளவு கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக தேய்க்க பார்வை கோளாறு தீரும்.
கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும் .கல்லிரளுக்கு ,அதிக வேலைகளை உள்ளன . இதயமும் ,கல்லிரலும் ஒன்றுதான் இருக்கிறது எனவே அவைகளை கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம் .
Comments
Post a Comment