பிரண்டையின் பயன்கள் Benefits of Brenda in tamil,
பிரண்டையின் பயன்கள்
Benefits of Brenda in tamil,
Mr.Health Special,
தமிழ் மூலிகைகள் :
பிரண்டையின் பயன்கள்:
பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.
வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் மாறி, மூல நோயால் ஏற்படும் புண்கள் குணமாகும்.
வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் எலும்பு முறிவு ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.
இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும். இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.
பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி. வச்சிரவல்லி.
Comments
Post a Comment