மாதுளம் பழமும் அதன் நிவாரணமும் | Pomegranate fruit and its relief in Tamil
மாதுளம் பழமும் அதன் நிவாரணமும்..!
Pomegranate fruit and its relief in Tamil..!
Mr.Health Special,
மாதுளம் பழம்
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
மாதுளம் பழசீசன்:
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள்:
★ மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது.
★ புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடு உள்ளது.
★ கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடு உள்ளது.
★ தாதுக்கள் 0.7 விழுக்காடும் உள்ளது.
★ சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும் உள்ளது.
★ மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளது.
★ இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம் அடங்கியுள்ளது.
★ கந்தகம் 12 விழுக்காடு அடங்கியுள்ளது.
★ குளோரின் 20 விழுக்காடு தயாமின் 0.46 விழுக்காடு அடங்கியுள்ளது.
★ பாஸ்பரம் 1.33 விழுக்காடு,
★ செம்பு 0.2 விழுக்காடு,
★ நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.
மேலும்,
★ வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
★ மாதுளம் பழத்தைப் பொறுத்த வரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.
மாதுளம் பூ வின் மருத்துவ குணங்கள்:
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.
மாதுளம் பழ ரசத்தின் மருத்துவ குணங்கள்:
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.
மாதுளம் பழத்தின் விதையின் மருத்துவ குணங்கள்:
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.
இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கி ஆண்மை சக்தி பலப்படும்.
Comments
Post a Comment