அதிக சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்..! Rich in Nutrients Apricot Fruits ..!
அதிக சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்..!
Rich in Nutrients Apricot Fruits ..!
Mr.Health Special,
Botanical name :
Brunus Armenieca.
ஒருவித புளிப்பு சுவை கொண்ட ஆப்ரிகாட் பழங்கள் (Apricot fruits )எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா(Brunus Armenieca) என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.
இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது.
இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் (Beta carotenes)
அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் (Carotenoids) எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது.
இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும்.
மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.
இரும்புச்சத்து (Iron) நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது.
ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது.
தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு (Red blood cell)
உற்பத்திக்கு மிகவும் நல்லது.
உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் (Of potassium)
மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது.
செரிமான சக்தியை அதிகமாக்கும் பொருட்டு உலர் ஆப்ரிகாட்கள் உணவுக்கு முன்னதாக உட்கொள்ளப்படுகின்றன. அமிலங்களை மட்டுப்படுத்தக்கூடிய காரமானி இதில் இருப்பதே இதற்கு காரணமாகும்.
உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
உலர் ஆப்ரிகாட் பழங்களில் பெக்டின் உள்ளது. மேலும் இதில் மிதமான மலமிளக்கியான செல்லுலோஸும் நிறைந்திருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவல்லதாகும்.
உலர் ஆப்ரிகாட்கள் காய்ச்சலை குறைக்க உதவும். ஆகவே சாறாகவோ அல்லது தேனுடன் சிறிது நீர் சேர்த்து திரவமாகவோ தயாரித்து பயன்படுத்தலாம் இத்திரவம் தாக சக்தியையும் கொடுக்கும்.
உலர் ஆப்ரிகாட் சாறு, வேனிற்கட்டி, சருமப்படை மற்றும் சொறி, சிரங்கு ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய அரிப்பை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. ஆப்ரிகாட் ஸ்கரப், பெரும்பாலும் சருமத்தின் இறந்த செதில்களை அகற்றுவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகின்றது.
கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்.
காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.
உலர்ந்த ஆப்ரிகாட், நீண்ட காலமாக கர்ப்ப கால மூலிகை மருந்தாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தையின்மை, இரத்தக்கசிவு, வலிப்பு போன்றவற்றை குணமாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது.
இந்த உலர் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ், பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை போக்கவல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை மிதமான அளவு உட்கொள்வது நன்மையளிக்கும். கர்ப்ப காலத்தின் போது, உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.
Comments
Post a Comment