பெண்களின் கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகு! Ashoka cures women's uterine problems!

பெண்களின் கருப்பை பிரச்சனைகளைப் போக்கும் அசோகு! Ashoka cures women's uterine problems! Mr.Health Special, நமது தேசத்தின் பாரம்பரிய மரம், அசோக மரம். சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பும், பெருமையும் அதிக அளவில் விவரிக்கப்பட்டுள்ளது. பூ, பட்டை மருத்துவ பயன் கொண்டவை. இதன் இலைகள் நீண்ட கூட்டிலைகள் அமைப்பு கொண்டது. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளிலும் வளரும். சிலர் தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர். பிண்டி என்ற அசோகு வேறு, நெட்லிங்கம் மரம் வேறு. இதை அசோகு, ஆயில், செயலை, பிண்டி, காகோளி என்று பல்வேறு பெயர்களில் அழைப்பர். இதன் ஒரு பூ, பெரிய பூங்கொத்து போன்று செம்மை கலந்து பட்டபூச்சி நிறத்தில் அழகுடன் காட்சியளிக்கும். அசோகமரங்கள் மிக அரிய பயன்களை பெண்களுக்குத் தரவல்லவை. ஒரு தாய் தன் மகளுக்கு எப்படி நல்ல விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்வாளோ அதைப்போல, சொல்லப்போனால் அதையும் விட மேலாக, பெண்களின் உடல் நலம் காக்கும் தன்மைமிக்கவை. 100 கிராம் மரப்பட்டையைச்சிதைத்து 400மிலி தண்ணீரிலிட்டு 100மிலி ஆகும்வரை காய்ச்சி வடிகட்டி 1...